கரோனா பாதிப்பை தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை உணர்ந்து மூன்று மாத காலத்திற்கு சுய உதவிக் குழு உள்ளிட்ட எந்த கடன்களையும் வசூல் செய்யக்கூடாது என ரிசர்வ் வங்கி, மத்திய அரசு அறிவித்தனர்.
அதனடிப்படையில் வங்கிகள், தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்திருந்தபோதும் அதனை மீறி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல தனியார் நிதி நிறுவனங்கள், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் சுய உதவிக்குழு பெண்களிடம் கட்டாய கடன் வசூலில் ஈடுபடுவதோடு கூடுதல் வட்டி கேட்டு பெண்களை மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களுடன் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சங்கு ஊதி பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் பழைய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்கள்