ETV Bharat / state

விராலிமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி - முகூர்த்தக்கால் நட்டுவைத்த அமைச்சர் - Pudukkottai jallikattu

புதுக்கோட்டை: விராலிமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள அம்மன்குளம் ஜல்லிக்கட்டுத் திடலில் முகூர்த்தக்கால் நடும் விழா அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.

minister
minister
author img

By

Published : Jan 10, 2020, 7:30 PM IST

தமிழர்களின் கலாசாரம், பாராம்பரியம், வீரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய நிகழ்வான ஜல்லிக்கட்டுப் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வருகின்ற 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில், விராலிமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள அம்மன்குளம் ஜல்லிக்கட்டுத்திடலில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்துகொண்டு முகூர்த்தக்கால் நட்டு வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ' தமிழ்நாட்டில் மிகச்சிறந்த 600 காளைகள் மட்டும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றும் வீரர்கள், காளைகள், பார்வையாளர்களுக்குப் பாதுகாப்பான போட்டியாக இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியைக் காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நட்டுவைக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உச்ச நீதிமன்ற விதிமுறைகள், அரசு சார்பில் முறையாக பின்பற்றப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் கால்நடைத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவையான மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்' என்றார்.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - பச்சை கொடி காட்டிய நீதிமன்றம்!

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள அம்மன்குளம் ஜல்லிக்கட்டு திடலில் முகூர்த்தக்கால் நடும் விழா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.

பின்;னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.,

தமிழர்களின் பாராம்பரியம், கலாச்சாரம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய நிகழ்வான ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வருகின்ற 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் துவக்கி வைத்து பெருமை சேர்த்தார்கள். இந்த ஆண்டும் விராலிமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின் படி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வித்தியாசமான ஜல்லிக்கட்டுப் போட்டியாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் மிகச்சிறந்த 600 காளைகளை மட்டும் தேர்வு செய்து இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்குபெறச் செய்து வீரர்கள், காளைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான போட்டியாக இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டியை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உச்சநீதிமன்ற விதிமுறைகள் அரசு சார்பில் முறையாக பின்பற்றப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்கு தடையின்றி விரைவாக தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில் கால்நடைத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயனைப்புத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் கால்நடைப் பராமரிப்புதுறையின் சார்பில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நடமாடும் அம்மா ஆம்புலன்ஸ் சிகிச்சை ஊர்தியும் போட்டி நடைபெறும் இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இதே போன்று மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தேவையான மருத்துவ வசதிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அனைத்து துறைகளும் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை ஒரு பாதுகாப்பான விழாவாக நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை வளர்போர் விரும்பும் வகையில் மேற்கொள்ளப்படும். விதிமுறைகள் எளிமையாக்க நடவடிக்கை இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.