ETV Bharat / state

சுயேச்சையின் சின்னம் மாறியதால் நாளை மறு வாக்குப்பதிவு! - pudukkottai rural body re election 30th

புதுக்கோட்டை: விராலிமலை அருகே சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்குப் பதிலாக மாற்று சின்னம் அச்சடிக்கப்பட்டதால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

pudukkottai-gets-re-election-of-symbol-inter-changed-to-an-independent-candidate
சுயேச்சை வேட்பாளரின் சின்னம் மாறியதால் நாளை மறு வாக்குப்பதிவு !
author img

By

Published : Dec 29, 2019, 3:48 PM IST

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பி. உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு எண் 15-க்கான உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வே. சேகர் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்திற்குப் பதிலாக அந்த வார்டுக்கான வாக்குச்சீட்டில் வேறு சின்னம் அச்சிடப்பட்டதால், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரும் 30ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

pudukkottai gets re-election of symbol inter changed to an independent candidate
உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு (1)

உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு (2)

இந்த மறு வாக்குப்பதிவு விராலிமலை ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண் 15இல் இடம்பெற்றுள்ள பாக்குடி, பேராம்பூர், கோங்குடிப்பட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளில் அடங்கியுள்ள வாக்குச்சாவடி எண் 107, 108, 109, 110, 111, 160, 161, 162, 163, 164, 165, 166, 167 ஆகிய 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் நடைபெறும். மறு வாக்குப்பதிவின்போது ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் மட்டுமே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும்.

27ஆம் தேதி இந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது பதிவான ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் மட்டும் வாக்குகள் பிரித்தெடுக்கும் அறையிலேயே தனியாக பிரித்து அவை எண்ணப்படாமல் மூடி முத்திரையிட்டு பாதுகாக்கப்படும். மறுவாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: வாக்குப் பெட்டியை திருடிச்சென்று முட்புதரில் போட்டுவிட்டு உறங்கிய நபர் கைது!

Intro:Body:விராலிமலை அருகே சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு பதிலாக மாற்று சின்னம் அச்சடிக்கப்பட்ட விவகாரம்: மறு வாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மற்றும்ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி சனிக்கிழமை வெளிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண் 15 க்கான உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் வே.சேகர் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்திற்கு பதிலாக அந்த வார்டுக்கான வாக்குச்சீட்டில் வேறுசின்னம் அச்சிடப்பட்டதால், 27, ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி வரும் டிச, 30 ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. இந்த மறு வாக்குப்பதிவு விராலிமலை ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண் 15 ல் இடம் பெற்றுள்ள பாக்குடி, பேராம்பூர் மற்றும் கோங்குடிப்பட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளில் அடங்கியுள்ள வாக்குச்சாவடி எண் 107,108, 109, 110, 111, 160, 161,162, 163, 164, 165, 166 மற்றும் 167 ஆகிய 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் நடைபெறும்.

மறு வாக்குப்பதிவின் போது ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் மட்டுமே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெறும். 27 ம் தேதி இந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பதிவான ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் மட்டும் வாக்குகள் பிரித்தெடுக்கும் அறையிலேயே தனியாக பிரித்து அவை எண்ணப்படாமல் மூடி முத்திரையிட்டு பாதுகாக்கப்படும்.

என்றும் மறுவாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று
மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.