ETV Bharat / state

Pudukkottai Job Fair: புதுக்கோட்டையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு - Pudukkottai news

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைத்தேடும் நபர்கள் ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளார்.

private sector job fair is being conducted in Pudukkottai district
படித்த இளைஞர்கள் பணிவாய்ப்பு பெறும் நோக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது
author img

By

Published : Apr 26, 2023, 7:09 AM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்துவிட்டு வேலைத் தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28.04.2023 (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். மேலும், வேலைத் தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறும் ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் டெண்டர் விட்டதில் முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.