புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குக்கிராமம் கூகனூர். இந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகள் பொன்மணி. தொடக்கப் பள்ளி மட்டுமே உள்ள இந்த ஊரில், 12ஆம் வகுப்பு முடித்து சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவம் பயின்றுள்ளார்.
இந்நிலையில், இந்திய அளவில் முதுநிலை சித்த மருத்துவப் பிரிவிற்கு (ஆயுஷ்) நடத்தப்பட்ட தேர்வில் 400 க்கு 377 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்து பொன்மணி சாதனை படைத்துள்ளார்.
விவசாயியின் மகளாக பிறந்து அரசுப் பள்ளியில் பயின்று சித்த மருத்துவத்தில் முதலிடத்தை பிடித்த மருத்துவர் பொன்மணிக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.