தமிழ்நாடு முழுவதும் தற்சமயம் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் அங்குமிங்கும் அல்லாடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மழைவேண்டி எல்லா மதத்தினரும் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்டுவருகின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் ஒன்றிணைந்து பரம்பூர் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக ஊரைச் சுற்றி வந்து ஊரின் நான்கு மூலைகளிலும் பாங்கு கூறி நிறைவாக பரம்மகுளக் கரையில் நின்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.