புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே சென்னையிலிருந்து அதிகாலை மூன்று மணியளவில் ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்தும், கதிர் அறுவடை இயந்திர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் (23), ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரண்யா (26) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 29 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த கீரனூர் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணியம் தலைமையிலான காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : தேர்தல் 2021: உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்த கதை