ETV Bharat / state

வாக்களிக்க விருப்பமில்லை... தேர்தல் அதிகாரியை தெறிக்கவிட்ட இளைஞர்! - 17ஏ

புதுக்கோட்டை: அரசியல் கட்சிகள் தான் வசிக்கும் பகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாகக்கூறி, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனக்கு வாக்களிக்கப் பிடிக்கவில்லை என 17ஏ படிவத்தை பூர்த்தி செய்துள்ளார்.

சண்முகநாதன்
author img

By

Published : Apr 19, 2019, 10:08 AM IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நம்மகோட்டையைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று வாக்களிக்க சென்றிருந்தார். அப்போது, அங்கு பணியிலிருந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தனக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்றும், அதற்குரிய படிவத்தைத் தாருங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

சண்முகநாதனின் கோரிக்கை ஏற்ற அலுவலர்கள், அதற்குரிய படிவத்தைக் கொடுத்து அவரின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டனர்.

வாக்காளர் சண்முகநாதன்

இதுகுறித்து நம் ஈடிவி பாரத்துக்கு சண்முகநாதன் அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, இந்தப் பகுதியில் தேர்தலை முன்னிட்டு கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு மனசாட்சிக்கு விரோதமாக பொதுமக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் நான் வாக்களிக்கப் போவதில்லை என முடிவெடுத்தேன் அதற்கான படிவத்தை வாக்குச் சாவடியில் வாங்கி பூர்த்தி செய்தேன்.

மேலும், இதுகுறித்து தேர்தல் நிலை அலுவலரிடம் தகவல் அளித்தேன். அதற்கு அந்த அலுவலர் தனக்கு அதுபோன்று எந்த ஒரு தகவலும் வரவில்லை என்றும், இதுகுறித்து உயர் அலுவலர்களிடம் கேட்பேன் எனக் கூறியிருந்தார். பின்னர், அவருக்கு வந்திருந்த கையேட்டின் படி,17ஏ படிவத்தின் கீழ் வாக்களிக்க மறுத்தாக அந்த அலுவலர் என்னிடம் தெரிவித்தார்.

நான் வசிக்கும் பகுதியில் ஜனநாயகம் இல்லாத நான் வாக்களிக்கவில்லை. பணநாயகத்திற்கு நான் விலைபோக விரும்பவில்லை, எனத் தெரிவித்தார்.

Intro:

Body:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலனம்மகோட்டையைச் சேர்ந்தவர் சண்முகநாதன் இவர் மேல நம்ம கோட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க சென்றபோது வாக்களிக்க விருப்பம் இல்லாமல் அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர் இடம் தான் வாக்களிக்க விரும்பவில்லை என்றும் அதற்குரிய படிவத்தை தாருங்கள் நான் நிரப்பித் தந்துவிட்டு வாக்களித்த அதற்கு அடையாளமாக விரலில் மை வைத்துக்கொண்டு ஆனால் வாக்களிக்காமல் செல்கிறேன் என்று கேட்டிருந்தார். அங்கிருந்த அலுவலர்கள் படிவத்தைக் கொடுத்து சண்முகநாதனிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டதோடு இவர் வாக்கு அளிக்க மறுத்து விட்டார் என்று படிவத்தை பூர்த்தி செய்து வைத்துக்கொண்டு அனுப்பி இருக்கிறார்கள்.
இச்சம்பவம் பற்றி சண்முகநாதன் கூறுகையில்,

இந்தப் பகுதியில் தேர்தலை முன்னிட்டு பணம் புகுந்து விளையாடியது அரசியல் கட்சிக்காரர்கள் நிறைய பணம் கொடுத்தவர்கள் வாக்காளர்களும் பணத்தை அனைவரிடமிருந்தும் பெற்றுக் கொண்டார்கள் எனக்கு பணம் வாங்கிக் கொள்வதிலோ வாங்கிக்கொண்டு வாக்களிப்பதில் விருப்பம் இல்லை எனவே வாக்களிக்காமல் இருப்பதற்கான முழு காரணத்தையும் அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் கொண்டு செல்வதற்காக 17 ஏ என்ற படிவத்தை பூர்த்தி செய்து தருவதாக கேட்டேன். ஆனால் அதிகாரிகள் பணம் கொடுத்து வாங்கி அதை மறைப்பதற்காக சண்முகநாதன் வாக்களிக்க மறுக்கிறார் என்ற தவறான காரணத்தை அதில் பதிவு செய்திருக்கிறார்கள் அது கண்டிக்கத்தக்கதாகும் என்று சண்முகநாதன் கூறினார் .

இதுபற்றி வாக்குச்சாவடி அலுவலர் இடம் கேட்ட போது,
நாங்கள் என்ன பதிவு செய்திருக்கிறோம் என்பதை எங்கள் உயரதிகாரிகளிடம் மட்டும்தான் சொல்லவும் காண்பிக்கவும் முடியும் அதனால் சம்பவத்திற்கு உரியவரான சண்முகநாதன் என்ன சொல்கிறாரோ அதை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.