புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(68). காந்தியவாதியான இவர் கடந்த 2017ஆம் ஆண்டில் ஊர் நடுவே உள்ள குளத்தை ஆக்கிரமித்து விலைநிலங்களாக்கி பல லட்சம் ரூபாய்க்கு விற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் உடனடியாக குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தற்போது நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தபோவதாக செல்வராஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து செல்வராஜ் கூறுகையில், ”ஊரின் நீராதாரமாக விளங்கிய குளத்தை தற்போது விலைநிலங்களாக்கி விற்றுவிட்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்திலேயே எத்தனையோ முறை மனு கொடுத்திருந்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. வரும் ஒன்பதாம் தேதி விராலிமலையில் தனிநபராக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப்போகிறேன். இதுபோன்று காந்திய வழியில் போராடினால்தான் இதற்கொரு தீர்வு கிடைக்கும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ’மதுபான விடுதிகள் நியாயவிலைக்கடைகளாக மாற்றப்படும்’ காந்தியவாதி ரமேஷ் அதிரடி