புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மேல்நிலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன்-இந்திரா காந்தி தம்பதி. அவர்களது மகன் அருண்பாண்டியன் (26) மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். அதன் காரணமாக வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துவந்துள்ளார்.
பாலச்சந்திரன் பலமுறை அவரைக் கண்டித்தும் கேட்டபாடில்லை. அதைத்தொடர்ந்து நேற்று இரவு வழக்கம்போல அருண்பாண்டியன் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதில் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன் அவரைக் கட்டையால் தாக்கியுள்ளார். அதில் காயமடைந்த அருண்பாண்டியன் உயிரிழந்தார். அதையடுத்து பாலச்சந்திரன் மகனை கொன்ற விரக்தியில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெளியில் சென்றிருந்த மனைவி இந்திரா காந்தி வீடு திரும்பியபோது கணவன் மகன் இருவரும் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறு: இளம்பெண் அடித்துக்கொலை!