புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை அப்பகுதியில் உள்ள பரோடா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் நேரடியாக வந்து வாங்கிக் கொள்ளலாம் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் எழுபதுக்கும் மேற்பட்டோர் இன்று காலை 6 மணி முதல் வங்கியின் முன் குவியத் தொடங்கினர்.
கூட்டம் அதிகமானதால், தகவல் அறிந்த அறந்தாங்கி கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வங்கி மேலாளரிடம் ஆலோசனை நடத்தி, காலை 50 பேருக்கும், மதியம் 50 பேருக்கும் பணம் வழங்குவதாகக் கூறி கூட்டத்தை கலைத்தனர்.
இதையும் படிங்க: நாகை வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு: கூட்டமாக வந்து பதிவுசெய்த அமைப்புசாரா தொழிலாளர்கள்