ETV Bharat / state

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று! - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று!

author img

By

Published : May 11, 2020, 10:25 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட மேடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதிகள், அவர்களிடம் பணியாற்றும் ஒருவர் என மூன்று பேர் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி செங்கல்பட்டில் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மூவரும் கடந்த மே 6ஆம் தேதி சென்னையிலிருந்து சொந்த ஊரான மேடுகாட்டுப்பட்டிக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறை, சுகாதாரத் துறையினர் அவர்களை கண்டறி்ந்து அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையில் தனிமைபடுத்தினர்.

அதனை தொடர்ந்து மருத்துவ குழுவால் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது, முடிவில் 3 பேரில் சுமார் 40 வயதுடைய ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சுகாதாரத் துறையினர் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இங்கு பாதிக்கப்பட்டுள்ள ஆறு பேரில், ஐந்து பேர் சென்னை கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...தனிமைப்படுத்தப்படும் வார்டை ஆய்வு செய்த காவல் ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.