கரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று மட்டும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 907ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 506 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், தற்போது 391 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பது போன்ற பாதுகாப்பு பணிகளும் நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.