புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள், நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புதியதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும்பொழுது அரசு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு அமைத்திட ஒப்பந்தகாரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் பணி முடிந்தவுடன் பாதுகாப்பாக மூடப்பட்டு அதன்பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களோ, அல்லது ஊடகத்துறையினரோ ஏதேனும் திறந்த வெளியில் ஆழ்துளைக் கிணறுகள் இருப்பின் அது குறித்து தகவல் தெரிவிக்க 18004259013-என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
நாகையில் ’வாட்ஸ் அப்’ எண் அறிவிப்பு
மூடப்படாமல் ஆழ்துளை கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை ஆட்சியர் பீரவின் நாயர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருந்தால், உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஆழ்துளைக் கிணறு குறித்து விவரங்களை அளிக்கலாம் என்றும், 8300681077 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகைப்படங்கள் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.