புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மஞ்சக்கரை பகுதியில் அறந்தாங்கியிலிருந்து அரசகுலம் சுப்ரமணியபுரம் வழியாக மணமேல்குடிக்கு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்தச் சாலையில் எதிரே அதிவேகமாக வந்த கார் மீது பேருந்து மோதாமல் இருக்க சாலையோரம் நிறுத்த முயற்சித்தது. அப்போது, தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்திலிருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
அவர்களை அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிக்கைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க :மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு!