சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று(மார்ச்.10) வெளியிடப்பட்டது. அதில், ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக தர்ம தங்கவேல் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராக இருந்த இவர், கடந்த மாதம் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்தவர் ஆவர்.
இந்நிலையில், ஆலங்குடி சட்டப்பேரவை வேட்பாளராகத் இவர் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குடி வடகாடு முக்கத்தில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், அறந்தாங்கியைத் தொடர்ந்து ஆலங்குடி தொகுதியும் பரபரப்பாக காணப்படுகிறது.
இதையும் படிங்க: வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரம்