ETV Bharat / state

அன்னவாசல் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு - புதுக்கோட்டையில் மலைப்பாம்பை பிடித்த இளைஞர்கள்

புதுக்கோட்டை: கீழக்குறிச்சியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு மீட்பு
10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு மீட்பு
author img

By

Published : Dec 7, 2019, 8:52 AM IST

புதுக்கோட்டை அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மலைப்பாம்பு ஒன்று எதையோ முழுங்கிவிட்டு நகர முடியாமல் இருந்துள்ளது.

இதை கண்ட விவசாயிகள் அருகில் இருந்த இளைஞர்களிடம் கூறியுள்ளனர். அந்த இடத்திற்கு வந்த அவர்கள் மலைப்பாம்பினைப் பிடித்து பார்த்தபோது அதன் வயிற்றின் குறுக்கில் முயல் இறந்த நிலையில் சிக்கியிருந்தது.

இளைஞர்களின் முயற்சியால் மலைப்பாம்பு வயிற்றில் இருந்த முயலை கக்கியது. அதனைத்தொடர்ந்து நார்த்தாமலை அருகே உள்ள ஊரமலை வனப்பகுதியில் அதனை விட்டனர்.

பிடிபட்ட மலைப்பாம்பு 10 அடி நீளமும் 20 கிலோ எடையும் இருந்ததாக இளைஞர்கள் கூறினர்.

இதையும் படிங்க: மீன்பிடி வலையில் சிக்கி 12 அடி நீளமுள்ள 4 மலைப் பாம்புகள் உயிரிழப்பு

Intro:Body:அன்னவாசல் அருகே
10 அடி -நீளம் உள்ள மலைப்பாம்பு பிடிப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் 10-அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்

அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அந்த பகுதியில் மலைப்பாம்பு ஒன்று எதையோ முழுங்கிவிட்டு நகர முடியாமல் இருந்துள்ளது
இதை கண்ட அப்பகுதி விவசாயிகள் அருகில் இருந்த இளைஞர்களிடம் இது குறித்து கூறியுள்ளனர்.
பின்பு சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி இளைஞர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு வயிற்றில் இருந்த முயலை கக்கியது. பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர்களே நார்த்தாமலை அருகே உள்ள ஊரமலை வனப்பகுதியில் விட்டனர்.
பிடிபட்ட மலைப்பாம்பு 10-அடி நீளமும் 20-கிலோ எடையும் இருந்ததாக தெரிவித்தனர்.
இதனால் கீழக்குறிச்சி பகுதியில் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.