பெரம்பலூர்: பெரம்பலூரில் நடைபெற்ற பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கு ஒருநாள் பயிற்சி முகாமில், சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுக தலைவரும், மூத்த தலைவர்களும் இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகின்றனர்.
கோயில்களை பற்றி விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதோடு தமிழ்நாடு அரசு இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் கருத்துகளை கூறுபவர்களுக்கு மறைமுக ஆதரவு தருகிறது. அதேபோல விசிக தலைவர் திருமாவளவன் தன்னை தீண்டாமை ஒழிப்பு போராளி என்று கட்டமைக்கிறார். அப்படியானால், தீண்டாமை ஒழிக்க செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ், பாஜகவை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும்.
திமுக என்றால் இரட்டை வேடம். ஒருபுறம் போதைப்பொருள் ஒழிப்பு இருக்க, மறுபுறம் டாஸ்மாக் திறக்கப்படுகிறது. பெண்களுக்கு சமுகநீதி என்று சொல்லிவிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள பெண்கள் மட்டும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். தமிழ்நாட்டில் கொடியேற்ற கூட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அரசு உடனே விழித்துக்கொள்ள வேண்டும்'