தேனி மாவட்டம் சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்த காஜல் (வயது 21), 7 வருடங்களுக்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார். இவர் லவ் வியா என்ற திருநங்கையோடு சேலத்தில் வசித்துவந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் MGR நகரில் திருநங்கைகள் 20க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 7 நாள்களுக்கு முன்பு இங்குள்ள மனிஷா என்பவரது வீட்டிற்கு காஜல் வந்துள்ளார்.
மனிஷா வெளியூருக்குச் சென்றுவிட்டு இன்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டினுள்ளே மின் விசிறியில் காஜல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து காஜலின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருநங்கையின் இறப்பிற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.