அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு மாநில அளவிலான டேக்வாண்டோ வீரர்கள் தேர்வு, பெரம்பலூரில் உள்ள எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா தலைமை தாங்கினார். இதில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட அளவில் தேர்வான வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகள் மூலம் டேக்வாண்டா வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியில் மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அரசு விளையாட்டு விடுதியில் சேர்க்கப்பட்டு, சிறப்பு டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பர்.