வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி கிராமத்தில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடக்கவிருந்த சூழலில், சைல்டு லைன் இலவச அலைபேசி மூலம் சமூக நலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்கையில் குழந்தை திருமணம் நடப்பது உறுதிசெய்யப்பட்டது. பின்னர், அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
![சமூக நலத்துறை அலுவலகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-01a-06-childmarriagestop-script-7205953_06062019162804_0606f_1559818684_974.jpg)
இதேபோன்று, குன்னம் வட்டம் அல்லிநகரம் கிராமத்தில் சிறுமி ஒருவருக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை சமூக நலத்துறையினர் தடுத்துநிறுத்தினர். இதையடுத்து, அந்த சிறுமிகள் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த வருடத்தில் மட்டும் 57 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.