கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (டிச. 17) காலை அரியலூரிலும், மாலை பெரம்பலூரிலும் ஆய்வுப் பணி மேற்கொள்கிறார்.
பெரம்பலூர் சென்ற முதலமைச்சர்
இதனையடுத்து, சேலம் மாவட்டத்திலிருந்து சாலை மார்க்கமாக பெரம்பலூர் வழியாக அரியலூர் சென்றார் முதலமைச்சர். அப்போது, பெரம்பலூர் கிருஷ்ணாபுரத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான இராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
அதுமட்டுமின்றி, செண்டை மேளம் முழங்க, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டனர்.
இதையும் படிங்க...சென்னையில் கல்லூரி, மாணவர் விடுதிகளில் பரிசோதனை தீவிரம்!