பெரம்பலூர் அருகே கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அருள்பாண்டியன். 25 வயதான இவர் கோழிப்பண்ணை வைத்திருந்தார். அவர் இளம்பெண் ஒருவரை இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு தனலட்சுமி மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் தனலட்சுமி அவரது உறவினருடன் இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருக்கையில் அருள்பாண்டியன் பின்தொடர்ந்து சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் முதுகில் குத்தியுள்ளார். இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து கத்திகுத்துடன் மயங்கி கீழே விழுந்த தனலட்சுமி உடனடியாக அரியலூர் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டார்.
ஆனால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே கொலை செய்த அருள்பாண்டியன் அவரது வயலுக்கு சென்று அங்கிருந்த மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகலறிந்த குன்னம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அருள்பாண்டியன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்து விசாரித்துவருகின்றனர்.