ETV Bharat / state

காவலருக்கு கரோனா: காவல் நிலையமாக மாறிய வாகனம்!

பெரம்பலூர்: காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டு, காவலர் வாகனத்திலேயே தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

Temporary Police Station in Police Van Due to Corona effect

author img

By

Published : Apr 20, 2020, 10:09 AM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 1477 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை காவலர் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மூடப்பட்ட காவல் நிலையம்
மூடப்பட்ட காவல் நிலையம்

இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வி.களத்தூர் காவல் நிலையத்தில், காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையொட்டி, அங்கு பணிபுரிந்த காவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காவல் துறை வாகனத்திலேயே தற்காலிக காவல் நிலையம் அமைப்பு

மேலும் காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில், அதே பகுதியில் காவல் துறையின் வாகனத்தில் தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியப் பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அகமதாபாத்தில் 21 காவலர்களுக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.