குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ இந்தியா வருகை தந்துள்ளார். இந்நிலையில், பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பிரேசில் அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முற்படும் பிரேசில் அதிபர் 'இந்தியாவிற்குள் வராதே திரும்பிப் போ திரும்பிப் போ' என்ற கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது!