பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானியங்கள், பூ உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் வெண்மணி கிராம விவசாயிகள் மேற்கூறிய சாகுபடிக்கு மாற்றாக கற்றாழை சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர். பல்வேறு மருந்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை விதைக்கப்பட்டு, 8 மாத கால முடிவில் அறுவடைக்குத் தயாராகியுள்ளது.
அறுவடை செய்யப்பட்ட பின்னர் கற்றாழைகள் சென்னை, புதுச்சேரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்பட இருக்கிறது.
மேலும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் கற்றாழை சாகுபடியில் மந்தம் ஏற்பட்டுள்ளது எனவும், எதிர்வரும் பருவமழை சரியாகப் பெய்தால் கற்றாழை விளைச்சல் அதிகளவிலிருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'புதிய தொழில் கத்துக்கோங்க' - கல்லூரி மாணவருக்கு கைகொடுக்கும் கற்றாழை ஜூஸ் தொழில்