நாடு முழுவதும் மறைந்த முன்னாள் இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தேசிய விளையாட்டு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
இந்த உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியில் விளையாட்டு விடுதி மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டனர்.