ETV Bharat / state

விபத்தில் சிக்கிய காரிலிருந்து 12 மூட்டை குட்கா பறிமுதல்!

author img

By

Published : Dec 4, 2019, 10:57 AM IST

பெரம்பலூர்: அரியலூர் நெடுஞ்சாலையில் பேரளி அருகே விபத்துக்குள்ளான காரிலிருந்து 12 மூட்டைகள் குட்காவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. அதே பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் போமா ராம். இருவரும், சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து தஞ்சாவூருக்கு ஸ்கார்பியோ காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திச் சென்றுள்ளனர்.

பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரள அருகே வேகமாக சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பின்னர், காரில் சென்ற இருவரும் காவல் துறையினர் வருவதற்குள் காரிலிருந்த 12 மூட்டைகள் குட்காவை அருகிலுள்ள ஓர் இடத்தில் மறைத்து வைத்துள்ளனர்.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருவத்தூர் காவல் துறையினர், விபத்துக்குள்ளான காரை மீட்டு அதில் வந்த இருவரிடமும் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

காவல் துறையினரின் விசாரணையில் இருவரும் முன்னுக்குப் பின் முரனாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தியதில், இருவரும் 12 மூட்டைகள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.

குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய கார்

பின்னர், இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள மறைத்து வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்தனர். இதனுடைய மதிப்பு இரண்டரை லட்சம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: லாரி மோதிய விபத்து... தந்தை கண்முன்னே உயிரிழந்த மகள்!

Intro:பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து தடைசெய்யப்பட்ட 12 மூட்டை குட்கா பறிமுதல் இருவரை பிடித்து மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Body:பெரம்பலூர் அருகே அரியலூர் நெடுஞ்சாலையில் பேரளி என்ற இடத்தில் விபத்துக்குள்ளான காரிலிருந்து தடைசெய்யப்பட்ட குட்கா 12 மூட்டைகள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த போமா ராம் ஆக இருவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து தஞ்சாவூருக்கு ஸ்கார்பியோ காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி சென்றுள்ளனர் இந்நிலையில் கடத்தி சென்ற குட்கா பொருளுடன் சென்ற கார் பெரம்பலூர் டோ அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரள என்ற இடத்தில் வேகமாக வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்நிலையில் விபத்துக்குள்ளான காரில் இருந்த 12 மூட்டை தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை அருகிலுள்ள இடத்தில் மறைத்து வைத்திருந்தனர் இந்நிலையில் கார் விபத்துக்குள்ளான செய்தி பொதுமக்கள் மூலமாக மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவலின்பேரில் மருவத்தூர் காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை மீட்கப்பட்ட பொழுது அதில் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றது தெரிய வருகிறது இதனிடையே காரில் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் போ மா ராம் ஆகிய இருவரை மருவத்தூர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா வின் மதிப்பு இரண்டரை லட்சம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது

Conclusion:விபத்துக்குள்ளான கார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மருவத்தூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டன இதுகுறித்து பெரம்பலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி மற்றும் காவல் அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.