பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் சின்னவெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், சிறு தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு 75 ஆயிரம் விவசாயிகள் 60 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் படைப்புழு தாக்குதலால் பெரும் இழப்பை சந்தித்தன.
இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்கு ரூ.18 கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தினை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கணவரை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: மருத்துவர் மீது புகார்