பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது சின்ன வெங்காயத்தின் குறைந்த பட்ச ஆதார விலை ரூ.30-ஆக விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் சின்ன வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்து சின்ன வெங்காய சாகுபடி செய்து விவசாயிகள் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சின்ன வெங்காயத்தை தலையில் சுமந்தும் மாலையாக அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சின்ன வெங்காயத்தை தலையில் கொட்டியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பூனை கடித்ததில் ஒரே நாளில் இரு பெண்கள் பலி; பூனையும் உயிரிழந்த மர்மம்?