பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க உறுப்பினர்கள், கடன் தொல்லையிலிருந்து விவசாயிகள் விடுதலை சட்டம் 2018, விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்திரவாத சட்டம் 2018, ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும், மத்திய - மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுத்து விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்டத் தலைவர் செல்லத்துரை, விவசாயிகள் விடுதலை சட்டத்தையும் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்திரவாத சட்டத்தையும் நிறைவேற்ற மத்திய அரசு தவறினால், விவசாயகளின் தற்கொலைகளை தடுக்க முடியாது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.