பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் வேலைவாய்ப்புத்துறை, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் டிவிஎஸ், ஜேகே டயர், விப்ரோ, சாம்சன் உள்ளிட்ட 94 கம்பெனிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்.
அதன்பின் பேசிய அவர், “பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 66 ஆயிரத்து 500 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்றைய இளைஞர்கள் அரசு வேலை மட்டும்தான் வேண்டும் என்று நினைக்காமல் இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் படித்த படிப்புக்கான வேலைகள் பங்கேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன், “இன்றைய படித்த இளைஞர்கள் அரசு வேலை கிடைக்கும் வரை காத்திருக்காமல், தாங்கள் விரும்பிய வேலை கிடைக்கப் பெற்று அதன் மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
நிறைவாக அவர் தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:எழில்மிகு தோற்றத்துடன் பிரமாண்டமாய் தயாராகும் தஞ்சை பெரிய கோயில்!