ETV Bharat / state

ஊரடங்கால் வருமானமின்றித் தவிக்கும் வயதான தம்பதியினர் - அரசு உதவுமா?

பெரம்பலூர்: அரசு உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், கரோனா ஊரடங்கு காரணமாக வயதான தம்பதியினர் வாழ வழியின்றித் தவித்து வருகின்றனர்.

Lockdown sufferings
Elderly couple demanding help from Govt. as suffering due to Lockdown
author img

By

Published : May 3, 2020, 2:11 PM IST

பெரம்பலூரில் அரசு வழங்கி வரும் முதியோர் உதவித் தொகையை மட்டுமே நம்பி, வயதான தம்பதியினர் வாழ்க்கை நடத்தி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கி வந்த முதியோர் உதவித்தொகையான ஆயிரம் ரூபாயை தற்போது அரசு நிறுத்தியதால், அடுத்த வேளை உணவுக்கே வழியின்றி, அவதிப்படும் அவலநிலைக்கு அந்த வயதான தம்பதியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் நகர், எளம்பலூர் சாலையில் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் வெங்கட்ராமன். 83 வயதான இவர், தனது மனைவி ஜலகத்துடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. இதையடுத்து தம்பதியினர் இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் என அரசு முதியோர் உதவித் தொகையாக வழங்கி வந்தது.

மேலும், அப்பகுதி வழக்கறிஞரிடம் உதவியாளராக நாள்தோறும் ரூ. 100 சம்பளமாக பெற்றுக்கொண்டு வெங்கட்ராமன் பணியாற்றி வந்தார். அரசு உதவித் தொகையுடன், நாள்தோறும் பெறும் பணத்தை வைத்துதான் இவர்கள் இருவரும், தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து, வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகை வழங்க முடியும் என்று கூறி, வெங்கட்ராமனுக்கு வழங்கி வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, தற்போது ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில், அவர் வேலை பார்த்து வந்த அலுவலகமும் பூட்டப்பட்டதால், அதன் மூலம் கிடைத்த வருமானமும் தடைபட்டது.

இதனால் அடுத்த வேளை உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை, வெங்கட்ராமன் தம்பதியினருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வேறு எந்த வருமானமும் இன்றி, ஒருவருக்கு மட்டுமே அரசின் உதவித் தொகை கிடைப்பதால், குடும்பம் நடத்த முடியாமல், தவித்து வரும் தம்பதியினருக்கு அருகில் உள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், மாவட்ட நிர்வாகம் நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்கினால் மட்டுமே, தங்களது வாழ்க்கையை நகர்த்த முடியும் என்று கோரிக்கை வைக்கின்றனர், அந்த மூத்த தம்பதியினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.