ETV Bharat / state

கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்! - பொதுமக்கள்

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இரண்டு நாட்களாக வழிந்தோடும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்
author img

By

Published : May 3, 2019, 11:04 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரிவாக்க சாலையை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக கழிவுநீர் சேமிப்பு தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. கடும் துர்நாற்றத்துடன் வெளியேறி வரும் கழிவுநீரால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கழிவுநீர் தொட்டியை சரி செய்யும்படி நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் பார்க்கவும் இல்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், நகராட்சி பகுதி புதை சாக்கடைத் திட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Intro:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இரண்டு நாட்களாக வழிந்தோடும் கழிவு நீர் சேமிப்பு தொட்டி நோய் பரவும் அபாயம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Body:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரிவாக்க சாலையில் சிவன் கோவிலை ஒட்டிய உள்ள தெருவில் கழிவுநீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அவதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை ஒட்டி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளன இந்த குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர் இதனிடையே கடந்த மூன்று நாட்களாக சாலை களில் வழிந்தோடும் புதை சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இந்த பகுதியில் உள்ள புதை சாக்கடை கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி வலிந்து கடந்த மூன்று நாட்களாக வெளியேறி வருகிறது மேலும் கடும் துர்நாற்றத்துடன் சாலைகளில் விழுந்து உடைந்த கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் நகராட்சி அலுவலரிடம் புகார் கொடுத்து இதுவரை நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை நகராட்சி அதிகாரிகள் வந்து பார்க்கவும் இல்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்

Conclusion:மேலும் பெரம்பலூர் நகராட்சி உட்பட்ட பல பகுதிகளில் புதை சாக்கடை திட்டத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் புதை சாக்கடைத் நிலையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.