கரோனா நோய் தொற்று தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய் தொற்றால் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள லெப்பைக்குடிகாடு பேரூராட்சி, அத்தியூர் மற்றும் துங்கபுரம் ஊராட்சிகளில் இன்று (01.05.2020) முதல் மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். மேலும் 14 நாள்களுக்கு வெளி நபர்கள் மேற்காணும் பகுதிகளுக்குள் செல்லவும், உள்ளூர் நபர்கள் வெளியில் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர தயாராகும் யோகி அரசு!