ETV Bharat / state

குரங்கு கையில் பூமாலை போல் மோடி கையில் நாடு! -முத்தரசன் - state sectretary mutharasan

பெரம்பலூர்: ஒரு குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் அது என்ன செய்யுமோ அதுபோல இந்த நாடு மோடி கையில் அகப்பட்டவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பெரம்பலூரில் தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.

முத்தரசன்
author img

By

Published : Apr 1, 2019, 8:18 AM IST

Updated : Apr 1, 2019, 8:58 AM IST

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூரில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகின்றார். பாரிவேந்தரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு இதில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் அது என்ன செய்யுமோ அதுபோல இந்த நாடு மோடி கையில் அகப்பட்டுவிட்டது. மேலும் அதிமுக அரசு மற்றும் அதிமுக கட்சியை பாஜக அடிமையாக்கி தான் என்ன சொல்கிறதோ அதை செய்யும் கட்சியாக அதிமுகவை மாற்றிவிட்டது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் மகத்தான வெற்றிபெறும். மோடி ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகின்றார். இவ்வாறு அவர் பேசினார்.

Intro:ஒரு குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் அது என்ன செய்யுமோ அதுபோல இந்த நாடு மோடி கையில் அகப்பட்ட விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பெரம்பலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு

Body:மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூரில் போட்டியிடுகிறது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் புதிய ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகின்றார் இதனிடையே பாரிவேந்தரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேரடி திடலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது பிரச்சார பொதுக்கூட்டத்தில் இலங்கைக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் கூறியதாவது குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் அது என்ன செய்யுமோ அதுபோல இந்த நாடு மோடி கையில் அகப்பட்டு விட்டது என்று தெரிவித்தார் மேலும் அதிமுக அரசு மற்றும் அதிமுக கட்சியை பாரதிய ஜனதா கட்சி அடிமையாக்கி பாரதிய ஜனதா கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்யும் கட்சியாக அதிமுக மாறி விட்டதாகவும் தெரிவித்தார் மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார் மோடி ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகின்றார் என்றும் மோடி என்றால் பொய்யர் என்பதுபோல எதைக் கூறினாலும் பொய்யாகவே கூறுவதாகத் தெரிவித்தார் மேலும் இந்தியா சார்பில் போட்டியிடும் பாரிவேந்தர் அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் மோடியையும் எடப்பாடியும் வீட்டுக்கு அனுப்பும் 2 ஆட்சிகளுக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது என தாம் முத்தரசன் தெரிவித்தார்

Conclusion:பொதுக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் இந்திய ஜனநாயக கட்சி விளம்பரப் பிரிவு செயலாளர் முத்தமிழ்செல்வன் மாவட்ட தலைவர் அன்பழகன் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன் செல்லத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Last Updated : Apr 1, 2019, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.