ETV Bharat / state

திருகல் நோயால் பாதிக்கப்படும் வெங்காயப்பயிர்கள் - மாற்று விவசாயத்தை நாடும் அவலத்தில் விவசாயிகள்! - வெங்காய விற்பனை நிலையம்

பெரம்பலூர்: திருகல் நோயால் பாதிக்கப்பட்டு, மகசூலின்றி தவித்து வரும் சின்ன வெங்காய விவசாயிகள், இதனை விடுத்து மாற்று விவசாயத்தை நாடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

chives-affected-by-twisting-disease-farmers-in-distress-seeking-alternative-farming

author img

By

Published : Sep 18, 2020, 7:49 AM IST

பெரம்பலூர் மாவட்டம், பெருவாரியான மானாவாரி நிலங்களைக் கொண்டது. மழையை மட்டும் நம்பி மானாவாரி நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறுதானிய வகைகள், பூக்கள் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்திற்கு ஏற்ற மண் வளம், தட்பவெப்ப நிலை ஆகிய காரணத்தினால் நான்கு பருவ சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே சின்ன வெங்காய உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிகுளம், லாடபுரம், மேலப்புலியூர், எசனை, நக்கசேலம், அம்மாபாளையம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.

சின்ன வெங்காயம் சேமிப்பு முறை
சின்ன வெங்காயம் சேமிப்பு முறை

அதேசமயம் இங்கு உற்பத்தியாகும் சின்ன வெங்காயம் அதிக முளைப்புத் திறன், துரித வளர்ச்சி மற்றும் கூடுதல் மகசூல், அனைத்து வகை மண்ணிலும் விளையக் கூடியது என்பதால்; தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இங்கு வந்து விதைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் மொத்த உற்பத்தியில் 80 விழுக்காடு விதைக்காகவே பட்டறைகள் போட்டு பாதுகாக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இம்மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சின்னவெங்காயம் திருகல் நோயால் பாதிக்கப்பட்டதால், விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நோயினால் வெங்காய வேர்கள் அழுகியும், பயிர் கருகியும் விடுவதால் இந்நோய் விளைச்சலை மொத்தமாக பாதித்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

சின்னவெங்காய விதை பட்டறை
சின்னவெங்காய விதைப் பட்டறை

இதுகுறித்து நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த விவசாயி நேரு கூறுகையில், 'பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திருகல் நோயால் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகளை வேதனை அடைய செய்தது. அதேபோல இந்த ஆண்டும் திருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பிற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளிமாவட்ட சந்தைகள் இல்லாதபோது விதைக்காக வைக்கப்பட்டுள்ள வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினாலும்; அவை 100 முதல் 150 வரை அதிக விலைக்கு வாங்கி நடவு செய்து லாபம் ஈட்ட முடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமாக சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுவதால், அதை விற்பனை செய்வதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் செட்டிகுளம் பகுதியில், சின்ன வெங்காய விற்பனை மையம் மற்றும் சின்ன வெங்காயம் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்பட்டது.

விற்பனை நிலையமின்றி தவிக்கும் விவசாயிகள்

ஆரம்ப காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சின்னவெங்காயம், இந்த வேளாண் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஏலம் விடப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகாலமாக இந்த சின்ன வெங்காய குளிர் பதனக்கிடங்கு மற்றும் வேளாண்மை மையம் செயல்படவில்லை. தற்பொழுது செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏலம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தும், விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்க முன்வருவதில்லை. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் இந்த ஏல மையத்திற்கு வராத காரணத்தினால், இது செயல்படுவதற்கான தகுதியை இழந்து விட்டது' என வேதனை தெரிவித்தார்.

செயலற்று கிடக்கும் விற்பனை நிலையம்
செயலற்று கிடக்கும் விற்பனை நிலையம்

இதுகுறித்து விக்னேஷ் என்ற விவசாயி கூறுகையில், 'தங்கள் பகுதியில் அதிக சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் பருவமழை காலத்தில் நோய்த் தாக்குதலால் அதிகமாக பாதிப்பைச் சந்திக்கிறது. அப்படி பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான சரியான தீர்வு இதுவரை வேளாண்துறை சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் எடுக்கப்படவில்லை.

விலை உயர்வு, விதை தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் மகசூலை ஈட்ட முடியாமல் தவித்து வருகிறோம். இதேபோக்கு தொடர்ந்து நீடித்தால் பாரம்பரியமான சின்ன வெங்காய விவசாயத்தை விட்டுவிட்டு, மாற்று விவசாயத்திற்குச் செல்ல நேரிடும்' என்று தெரிவிக்கின்றனர்.

திருகல் நோயால் பாதிக்கப்படும் சின்னவெங்காயம்
திருகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயத்தின் காட்சி

திருகல் நோயால் மகசூலின்றி சிக்கித் தவிக்கும் பெரம்பலூர் மாவட்ட சின்ன வெங்காய விவசாயிகள், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண செட்டிகுளத்தில் முடங்கிப்போய் கிடக்கும் சின்ன வெங்காய விற்பனை மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கொண்டு வருவதோடு, நிலையான கொள்முதல் விலையை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க:3.31 நிமிடங்களில் 2222 அம்புகள் எய்து 5 வயது சிறுவன் சாதனை...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.