பாஜக சார்பில் வேளாண் திட்டங்கள் குறித்து மக்களிடையே விளக்கும் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், பெரம்பலூர் குன்னம் பகுதியில் நடைபெற உள்ள கூட்டத்திற்காக வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "அகில இந்திய தலைமை தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும். அதன் பிறகே முடிவு அறிவிக்கப்படும். நீட் தேர்வுக்காக மாணவர்கள் தங்களை அகில இந்திய அளவில் தயார்படுத்திவருகின்றனர். நீட் தேர்வுக்காக அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, அவர்கள் மனதை மற்ற அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் முன்வரக்கூடாது" எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க... விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டம் தோல்வி - தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன்