பெரம்பலூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலி பரப்புரை சுற்றுப் பயணத்தின்போது பெண்களைப் பற்றியும் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றியும் இழிவாக பேசியதாக தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பெரம்பலூர் பாலக்கரை பகுதி முன்பு மாவட்ட கழக செயலாளரும், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி பேசியதை திரையிட்டு காட்டி மு.க.ஸ்டாலின் விமர்சனம்!