ETV Bharat / state

அமமுக நிர்வாகி கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் கைது - தமிழ் குற்ற செய்திகள்

பெரம்பலூர்: அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையால் தேடப்பட்டு வந்த முன்னாள் பெரம்பலூர் நகராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.

AIADMK party member arrested in murder case

author img

By

Published : Jun 20, 2020, 7:06 PM IST

பெரம்பலூர் நகர்ப்புற பகுதியான சங்கு பேட்டையைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர மாணவரணி செயலாளராக இருப்பவர் பாண்டி (எ) வல்லத்தரசு. இவர் கடந்த ஜூன் 2ஆம் தேதி பெரம்பலூர் விழா முத்தூர் சாலையோரம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வல்லத்தரசு உடனிருந்து படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, அவரது நண்பர் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

இதனிடையே, இந்த கொலை தொடர்பாக நான்கு பேர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மேலும் இருவரை பெரம்பலூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான பெரம்பலூர் முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ் என்பவரைக் காவல் துறையினர் வலைவீசித் தேடிவந்தனர்.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் ரமேஷ், நேற்றிரவு பெரம்பலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜரானார். இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், இன்று காலை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அசோக் பிரசாத் முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியான ரமேஷை சிறையிலடைக்கும் படி உத்தரவிட்டார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி கொலை வழக்கில் முன்னாள் நகராட்சி தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.