பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான 47ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாவட்டம் முழுவதும் 33 பள்ளிகளை சேர்ந்த 121 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
அறிவியல், வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட மையக் கருத்துகளை கொண்டு மின்சார தேவையை குறையில்லாமல் பூர்த்தி செய்வது, வேளாண்மையில் இயற்கை முறையில் புழு, பூச்சிகள் தாக்குதலில் இருந்து மகசூல் பெறுவது உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் சிறப்பாக தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்த கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருளரங்கன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: விண்வெளி ஆடைகள் குறித்து விளக்கும் நாசா! - நேரலை