ETV Bharat / state

பெரம்பலூர் அருகே சாலை விபத்து: திருநங்கை உள்பட இருவர் உயிரிழப்பு! - Bike Accident in Perambalur

பெரம்பலூர்: இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், திருநங்கை உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

accident
accident
author img

By

Published : Feb 8, 2021, 11:50 AM IST

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கையான கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் பிரிவு சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே திருநங்கை உள்பட இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் நகர காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.