நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள வடுகபட்டியில் வசித்துவருபவர் நாகலிங்கம் பிள்ளை (100). 1920 பிப்ரவரி 19ஆம் தேதி பிறந்த இவருக்கு நாகரத்தினம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்துவிட்டார்.
இவருடைய குடும்பத்தில், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள், எள்ளுப் பேரன்கள், எள்ளுப்பேத்திகள் என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், நாமக்கல், சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து நாகலிங்கத்தின் 100ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட முடிவுசெய்தனர். இதனையடுத்து சொந்த ஊர் வந்த அனைவரும் நாகலிங்கத்தின் பிறந்தநாளை நேற்று கேக் வெட்டி கொண்டாடினர். இதன்பின்பு அனைவரும் நாகலிங்கத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.
அப்போது, நாகலிங்கம் தனது கடந்த கால அனுபவங்களை தனது குடும்பாத்தாருடன் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: எம்ஜிஆரின் சிலைக்கு காவி நிறச் சட்டை