ETV Bharat / state

கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் காயம் - தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம்

நாமக்கல்: அரசு பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்ததை அடுத்து தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாணவிகள் காயம்
author img

By

Published : Jul 8, 2019, 7:05 PM IST

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த வியாழன் அன்று கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காயத்ரி, கனிஷ்கா ஆகிய மாணவிகள் சுவற்றிற்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர். காயத்ரி காலிலும், கனிஷ்கா தலையிலும் பலத்த காயம் அடைந்த நிலையில் இருவருக்கும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாணவி காயத்ரி உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெற்றோர்கள் போராட்டம்

தலையில் அடிபட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவி காயத்ரி அபாய கட்டத்திலேயே உள்ளதால் அம்மாணவிக்கு உயர் சிகிச்சை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வித் துறை, காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்டக் கல்வி அலுவலர் உதயகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை மாணவர்களின் பாதுகாப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதோடு, ஆபத்தான கழிவறை சுவர் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காதைதக் கண்டித்தும் கவனக் குறைவாக செயல்பட்டதாகவும் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Intro:நாமக்கல் அருகே அரசு பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 2 பள்ளி படுகாயமடைந்த மாணவிக்கு உயர் சிகிச்சை அளிக்க கோரியும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி பெற்றோர், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம். தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கைBody:நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டி பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் கடந்த வியாழன் அன்று கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காயத்ரி, கனிஷ்கா ஆகிய மாணவிகள் சுவற்றிற்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர். காயத்ரி காலிலும், கனிஷ்கா தலையிலும் பலத்த காயம் அடைந்த நிலையில் இருவருக்கும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு காயத்ரி உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தொடர்ந்து அபாய கட்டத்திலேயே உள்ள நிலையில் அம்மாணவிக்கு உயர் சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியின் வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கல்வி துறை மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கொடுத்த உறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை மாணவர்களின் பாதுகாப்பில் கவன குறைவாக செயல்பட்டதோடு, ஆபத்தான கழிவறை சுவர் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து மாணவர்களை பயன்படுத்த அனுமதித்து பணியில் கவன குறைவாக செயல்பட்டதாக அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.