வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ள விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சமூக விலகலையும் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காய்கறி, மளிகை மற்றும் மருந்து கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் சமூக விலகலை புறக்கணித்து கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கும் காட்சியே காண முடிகிறது.
இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாமக்கல் மணிக்கூண்டு அருகே செயல்படும் மருந்தகத்தின் முன்புறம் பெயிண்டால் ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டம் வரையப்பட்டுள்ளது.
அதில் உள்வட்டம் வரையப்பட்டு அதனுள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நிற்க வைக்கப்பட்டு அவர்களிடம் கடை பணியாளர்கள் மருந்து சீட்டை பெற்று அவருக்கான மருந்து எடுத்து வந்து கொடுக்க வழி செய்யப்பட்டுள்ளது.