சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அலுவலர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் தேர்தல் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி அவர்கள் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4.57 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அரசு கரூவுலத்தில் ஒப்படைத்தனர். மேலும் பணத்தை எடுத்து வந்த ஓட்டுநரிடம், தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பைபாஸ் சாலையில் ரவுண்ட்ஸ்.. ரூ. 4.35 லட்சம் பறிமுதல்