ETV Bharat / state

மளிகைக் கடைக்காரரும் உலக விஞ்ஞானிதான்... பொதுமக்கள் பாராட்டு - நாமக்கல் மாவட்டச் செய்திகள்

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே வாடிக்கையாளர்கள் தரும் ரூபாய் நோட்டுகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வாங்கும் மளிகை கடையின் உரிமையாளரின் செயல் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

sanitizer
sanitizer
author img

By

Published : Apr 29, 2020, 10:21 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியே வந்து செல்கின்றனர். மேலும், நோய் பரவலைத் தடுக்க மக்கள் அடிக்கடி சோப்பு மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் முகக்கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், பிளாஸ்டிக் பொருட்களில் சில நாட்கள் வரையும் கரோனா வைரஸ் உயிர் வாழும். அச்சடிக்கப்பட்ட, காகிதம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கரோனா வைரஸ் 3 மணி நேரத்திற்கு குறைவாகவும் உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், பணத்தை வாங்கிய பின் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் நிலை மாறி, ஒரு படி மேலே போய் ரூபாய் நோட்டுக்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வருகிறார் ஒரு வியாபாரி. பிற மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிலும் இதுபோன்ற நிகழ்வை காணுகையில் வியப்பை தருவது நிதர்சனம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நல்லியாம்பாளையத்தில் உள்ள பாரதி மளிகைக் கடை உரிமையாளர் சேகர் என்பவர் மக்களிடம் சமூக இடைவெளி மற்றும் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகிறார். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருட்களை விற்பனை செய்கிறார்.

முகக்கவசம் இல்லாதவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவது இல்லை. அதேபோன்று வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணம் மற்றும் சில்லறை காசுகளை கிருமி நாசினி கொண்டு கழுவி நோட்டுக்களை உடனடியாக உலர வைக்கிறார். மற்றவர்களுக்கு பணம் தரும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும் கொடுக்கிறார். அதேபோல் மாவட்ட நிர்வாகத்தால் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் அட்டைகள் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அட்டைகளை பயன்படுத்தி வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த அட்டையை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மளிகை பொருட்களை விற்பனை செய்தும் வருகிறார்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் சேகர் கூறுகையில், "மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் படியே தான் கடையை நடத்தி வருகிறேன். தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே காய்கறிகள் வழங்குவேன். அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து கரோனா யுத்தத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவது நமது தலையாய கடமை" என்றார்.

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணிக்கு அலட்சியம் காட்டிய மருத்துவமனைகள் - தாயும், சேயும் உயிரிழந்த சோகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.