கரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவத்துறை, தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு இன்று( ஆக.3) நடைபெற்றது.
இதனை நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் கரோனா நோய் தொற்றிலிருந்து தற்காத்து கொள்வது குறித்தும் காவலர்களுக்கு ஆன்லைன் கருத்தரங்கம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் உடற்பயிற்சி, யோகா குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர்.