நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் சுகாதாரத் துறையினர் சார்பில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படாத நிலையில் இன்று மாவட்ட முழுவதும் 23 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒவ்வொரு முகாமிலும் முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் 18 வயது முதல் அனைவருக்குமே போடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு 1,280 கோவாக்சின் தடுப்பூசிகளும், 3000 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி வராததால் பொதுமக்கள் காத்து கிடந்ததோடு தடுப்பூசிக்கான டோக்கன் விநியோகம் செய்யாததால் தங்கள் காலணிகளை வைத்து இடம் பிடித்தனர்.
மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சாலையோரம் உள்ள நிழல் பகுதியில் அமர்ந்தவாறு தடுப்பூசிக்காகக் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.