நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் மற்றும் வேலூர் பேரூர் கழக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாமக்கல் அதிமுக மாவட்ட செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெண்கள் என ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசுகையில் "அக்காலத்தில் முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்ஜிஆர் படத்தின் பெயர்கள் அனைத்தும் கருத்து உள்ளதாக இருந்திருக்கின்றன.
ஆனால் தற்போது 'திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து சைக்கோ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சைக்கோ என்றால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பொருள். அதன் அடிப்படையில் திமுகவில் இருப்பவர்கள் எவ்வாறானவர்கள் என புரிந்து கொள்ள வேண்டும் என விமர்சித்தார்.
மேலும் திமுக ஆட்சி காலத்தில் நிலம் விற்பனை செய்ய வேண்டும் என்றால் திமுகவின் கட்சி நிர்வாகிகள் தலையிட்டால் மட்டுமே விற்பனை செய்யும் நிலை இருந்ததாகவும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சேலத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் இருந்தது.
அப்போது திமுகவினர் சென்று தங்களுக்கு அந்த இடத்தை விற்பனை செய்யவேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தியதாகவும். இதற்கு மறுப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக ஒரே வாரத்தில் அந்த குடும்பத்தில் உள்ள ஆறு பேரையும் திமுகவினர் கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபட்ட திமுகவினர் தற்போது அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூற தகுதியற்றவர்கள் எனவும் கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க :அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம் 'ராஜாவுக்கு செக்' - சேரன்